Just see change in little bit for anyone mind...........................
ஞாயிறு, 30 ஜனவரி, 2011
சனி, 29 ஜனவரி, 2011
பகவத் கீதை
பகவத் கீதை என்பது இந்து சமயத்தினரின் முக்கிய நூல்களுள் ஒன்றாகும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அர்ஜூனன் அங்கே தன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தான். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காக போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்றார். மேலும் அப்போது அவனுடன் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் உரையாடினார். இந்த உரையாடலே பகவத் கீதை ஆனது,
Tamil Bhagavad Gita. - Yatharth Geeta.com
குண்டலினி சக்தி
"மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலு நாடி உம்முள்ளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே".
- சிவவாக்கியார் -
இந்தப் பாடலில் குண்டலினி யோகத்தைப் பற்றி சொல்கிறார் சிவவாக்கியார். நம்முள் அடங்கியுள்ள மூலாதார சக்தி குண்டலினி சக்தியாகும். அந்த குண்டலினி யோகத்தை பயின்று படிப்படியாக அதை மேலே உயர்த்தி புருவமத்திக்கு யாரால் கொண்டு செல்ல முடியுமோ, அவரால் இளமையோடு நீண்டகாலம் வாழ்வதோடு , பரப்பிரம்மமாகாவும் இருக்கலாம் என்று ("ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே") சிவன்பெருமான மீதும் பார்வதி தேவியார் மீதும் ஆணையிட்டுச உறுதியாகச் சொல்கிறார்.
நாலு நாடி உம்முள்ளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே".
- சிவவாக்கியார் -
இந்தப் பாடலில் குண்டலினி யோகத்தைப் பற்றி சொல்கிறார் சிவவாக்கியார். நம்முள் அடங்கியுள்ள மூலாதார சக்தி குண்டலினி சக்தியாகும். அந்த குண்டலினி யோகத்தை பயின்று படிப்படியாக அதை மேலே உயர்த்தி புருவமத்திக்கு யாரால் கொண்டு செல்ல முடியுமோ, அவரால் இளமையோடு நீண்டகாலம் வாழ்வதோடு , பரப்பிரம்மமாகாவும் இருக்கலாம் என்று ("ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே") சிவன்பெருமான மீதும் பார்வதி தேவியார் மீதும் ஆணையிட்டுச உறுதியாகச் சொல்கிறார்.
குண்டலினி சக்தி…
குண்டலினி சக்தி, சித்துக்கள்குண்டம் என்றால் சேமிக்கப் பெறும் பொருட்களை தாங்கி எளிதில் அது வெளியேறாதபடி பாதுகாக்கும் இடம். குண்டத்தில் தங்கி லயம் பெறுகிற சக்தி குண்டலினி ஆயிற்று.
மனித சரிரத்தைத் தாங்கி நிப்பது குண்டலினி சக்தியே, இது பாம்பு போல் வளைந்து சுருண்டு சரீரத்தினுள் எருவாய்க்கும், கருவாய்க்கும் இடையில் உள்ளது. இந்த இடத்திற்கு மூலாதாரம் என்று பெயர்.
குண்டலினி சக்தியை விழிக்கச் செய்தே சித்தர்கள் அட்டமா சித்தியைப் பெற்றனர். யோகப் பயிற்ச்சிகள் செய்து இந்தக் குண்டலினி சக்தியை விழிக்கச் செய்வதன் மூலம் யோகியர் இறையனு பவங்களைப் பெறுகிறார்கள். தெய்வீக இரகசியங்களை அறிகிறார்கள்.
குண்டலினி சக்தி உடம்பில் சக்தி அம்சமாக உள்ளது. உச்சந்தலையில் சிவா அம்சம் உள்ளது. குண்டலினி
சக்தி சிவத்தைச் சேரும் இன்பமே பேரின்பம் இந்த அனுபவத்தை சித்தர்கள் நிறையவே தங்கள் பாடல்களில் பதிந்துள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை வாய்த்ததுக்குக் காரணமே இந்தக் குண்டலினி சக்தியின் ஆற்றலால் தான்.
யோகிகளும், சித்தர்களும் இந்த சக்தியை முழு அளவில் எழுப்பி உச்சந்தலைக்கு ஏற்றுகிறார்கள். அவர்களால் அளவற்ற அற்புதங்களை செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)